ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

சமூக வலைதளங்களில் வைரலாகும் சரஹா உண்மையில் பாதுகாப்பானது தானா? August 11, 2017

சமூக வலைதளங்களில் வைரலாகும் சரஹா உண்மையில் பாதுகாப்பானது தானா?


ஆண்ட்ராய்ட் உலகை சில ஆப்கள் ஆக்கிரமித்து வைரலாவது வழக்கம். வெளியாகி சிலநாட்களில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு பின்னர் காணாமல் போகும். சமீபத்தில் ப்ரிஸ்மா, ஃபேஸ் ஆப் என்று வைரலாகி காணாமல் போனது. தற்போதைய ட்ரெண்டிங்கில் ஸ்ம்யூல் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கிறது.

அந்த வகையில் ஆண்ட்ராய்டுக்கு புதிய வரவு சரஹா(sarahah). இந்த ஆப்பை தரவிறக்கம் செய்து யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து ஒரு முறை அதில் இணைந்துவிட்டால் போதும். பின்னர் நீங்கள் உங்கள் சேட்டையைத் தொடங்கலாம். இந்த ஆப்பை பயன்படுத்தி மற்றவருக்கு மெசேஜ் செய்யலாம். இதன் முக்கிய அம்சம் மெசேஜை யார் அனுப்புகிறார்கள் என்று தெரியாது என்பது தான்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பண்டைய கால மொட்டக்கடுதாசியின் டிஜிட்டல் வெர்சன்தான் சரஹா. இணைய தளங்களை திடீரென்று ஆக்கிரமித்திருக்கிறது சரஹா. தங்களுக்கு வரும் மெசேஜ்களை பேஸ்புக் மட்டுமல்லாது ட்விட்டரிலும் ஷேர் செய்து மெசேஜ்களுக்கு பதில் அளித்து வருகிறனர் சமூக வலைதளவாசிகள்.

எல்லாம் சரிதான். ஆனால் அதன் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்புகிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். இந்த ஆப் மூலம் மெசேஜ் அனுப்பியவர்களின் தகவல்கள் சில நாட்களில் பயனாளருக்கு தெரிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அதோடு இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் மிரட்டல்கள் விட வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எந்த ஆப்களும் திடீரென்று தோன்றி சிலகாலத்திற்குள் வழக்கொழிந்து போகும். ஆனால் இது போன்ற பாதுகாப்புக்கு மட்டுமல்லாது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லாத ஆப்களை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Related Posts:

  • விளாம் பழம் விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல… Read More
  • ஓரினச்சேர்க்கை குற்றமல்ல. ஆர்.எஸ்.எஸ் யாருக்கும் இடையூறு இல்லாதவாறு அது நடந்தால் அது தவறில்லை - ஆர்.எஸ்.எஸ் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபல் அரைநிர்வாண ஆடைகளுடன் இவர்கள் கூடும்போதே நமக்கு … Read More
  • ப்ளு கிராஸ் எங்கே ??? மாதர் சங்கம் எங்கே ??? PETA எங்கே ???? ப்ளு கிராஸ் எங்கே ???மாதர் சங்கம் எங்கே ??? PETA எங்கே ???? மத வெறியை அடக்க, ப்ளு கிராஸ் எங்கே ???சாதி வெறியை அடக்க, மாதர் சங்கம் எங்கே ???… Read More
  • ரஷ்யாவில் விமான விபத்து : 55 பேர் பலி தற்போது: ரஷ்யாவில் விமான விபத்து : 55 பேர் பலி  துபாயில் இருந்து வந்த விமானம் ரஷ்யாவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இதில் 7 வி… Read More
  • அன்னாசி அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு ப… Read More