ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

​சர்வதேச பீரங்கி போட்டியின்போது நடுவழியில் பழுதாகி நின்ற இந்திய பீரங்கிகள்..! August 13, 2017

​சர்வதேச  பீரங்கி போட்டியின்போது நடுவழியில் பழுதாகி நின்ற இந்திய பீரங்கிகள்..!


ரஷ்யாவில் நடைபெற்றுவரும் சர்வதேச அளவிலான பீரங்கிகள் போட்டியிலிருந்து, இந்தியா வெளியேறியது. இறுதிப்போட்டிக்கு, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 4 நாடுகள் முன்னேறியுள்ளன. 

மாஸ்கோ நகரில், சர்வதேச அளவிலான பீரங்கி போட்டிகள் நடைபெறுகிறது. இதில் ரஷ்யா, கஜகஸ்தான், சீனா, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் கலந்து கொண்டன. 

இந்தியா சார்பில், டி-90 ரக பீரங்கிகள் கலந்து கொண்டன. சீனா 96பி ரக பீரங்கிகளுடனும், பெலாரஸ் நவீன டி-72 ரக பீரங்கிகளுடனும், ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் டி-72, பி3 ரக பீரங்கிகளுடனும் பங்கேற்றன. 

ஆரம்ப கட்ட சுற்றுகளில் இந்திய பீரங்கிகள் சிறப்பாக செயல்பட்டன. ஆனால், இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றின் போது, இந்தியா சார்பில் கலந்து கொண்ட இரண்டு டி-90 பீரங்கிகளிலும் கோளாறு ஏற்பட்டது. 

இதனால், அவை தகுதிநீக்கம் செய்யப்பட்டன. இதனை அடுத்து, இறுதிப்போட்டிக்கு ரஷ்யா, சீனா, பெலாரஸ், கஜகஸ்தான் ஆகிய 4 நாடுகள் தகுதி பெற்றன.

Related Posts: