செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

​கோரக்பூர் துயரத்திற்கு நிர்வாகத் தோல்வியே காரணம் என இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்! August 15, 2017

​கோரக்பூர் துயரத்திற்கு நிர்வாகத் தோல்வியே காரணம் என இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்!


கோரக்பூர் மருத்துவமனையில் 70 குழந்தைகள் வரை பலியான சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வியே காரணம் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் அளிவித்துள்ள அறிக்கையில், மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யும் நிறுவனம் பல முறை எச்சரித்தும் சுகாதார துறை அதற்கான நிதி ஒதுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தன் மீதான தவறை மறைக்க மருத்துவர்களை பலிகடாவாக்க கூடாது என்றும் மருத்துவமனை முதல்வர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் மருத்துவ கவுன்சில் அறிக்கையில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. 

Related Posts: