செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

அசாமில் கடும் வெள்ளப்பெருக்கில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு! August 15, 2017

அசாமில் கடும் வெள்ளப்பெருக்கில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு!


அசாம் மாநிலத்தில் பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அசாமில் பலத்த மழையால் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் கரைமீறிப் பாய்கிறது. ஆற்றின் கரையில் உள்ள 21மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஊர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்தப் பகுதிகளில் 22லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திப்ரூகர், குவகாத்தி, மஜூலி, கோக்ரச்சார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பத்துப் பேர் உயிரிழந்தனர். சாலை, ரயில்பாதை ஆகியவை மூழ்கியுள்ளதால் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வடகிழக்கு மாநிலங்கள்  துண்டிக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.

Related Posts: