திங்கள், 7 ஆகஸ்ட், 2017

வேளாண்மையை அழித்தொழிக்க ஓ.என்.ஜி.சி, கெயில் போன்ற எண்ணெய்-எரிவாயு நிறுவனங்கள் மற்றும் காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்டிக்கொண்டே இருக்கும் கர்நாடகா

தமிழரின் தொன்மைத் தொழிலான வேளாண்மையை அழித்தொழிக்க ஓ.என்.ஜி.சி, கெயில் போன்ற எண்ணெய்-எரிவாயு நிறுவனங்கள் மற்றும் காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்டிக்கொண்டே இருக்கும் கர்நாடகாவைச் செல்லமாகத் தட்டிக் கொடுக்கும் மத்திய அரசு!
மீன்பிடித் தொழிலை அழிக்க அணுஉலைகள் மற்றும் சிங்கள இந்தியக் கடற்படைகள்,
தமிழ்நாட்டுக்கு எப்படிப்பட்ட ஆபத்து வரும் என்றே தெரியாத நியூட்ரினோ திட்டம்!
தமிழரின் தொன்மையையும் வரலாற்றையுமே மறைக்க மத்திய அரசைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம்!
ஒரு நாட்டுக்கான வரலாறு என்பது ஒரு வீட்டுக்கான பத்திரம் போன்றது என்பார் தேவநேய பாவாணர். அப்படி தமிழர்களின் வரலாற்றை மறைத்து அழிக்கும் முயற்சிதான் கீழடியில் தற்போது நடந்துகொண்டிருக்கிறது.
கீழடி தொல்பொருள் ஆராய்ச்சியில் மத்திய அரசின் தமிழர் எதிர்ப்பு பற்றிய இந்த ஆவணப் படத்தை தயாரித்து ஒளிபரப்பிய நியூஸ் 7 தமிழ்த் தொலைக்காட்சிக்குக் கோடானுகோடி நன்றிகளை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

source: FB மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு