வியாழன், 9 ஜனவரி, 2020

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிப்பு... சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் உயர்வு..

Image
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் அபாயம் நிலவி வரும் நிலையில் துபாயில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. 
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு கிராம் தங்கம் இந்திய ரூபாய் மதிப்பில் 3 ஆயிரத்து 510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக துபாய் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு பிறகு அமெரிக்கா- ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் விலை மேலும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சர்வதேச சந்தையின் தாக்கத்தால் இந்திய சந்தையிலும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னையில் நேற்றைவிட ஒரு ரூபாய் மட்டும் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 844 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 30 ஆயிரத்து 752 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

credit ns7.tv