வியாழன், 9 ஜனவரி, 2020

சென்னை ஐஐடி-யில் ரோபாட்டிக் ஆய்வகம் அமைக்க நிதியுதவி வழங்கிய முன்னாள் மாணவர்கள்!

Image
சென்னை ஐஐடி-யில் ரோபாட்டிக் ஆய்வகம் அமைக்க முன்னாள் மாணவர்கள் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
சென்னை ஐஐடி-யில் உயர்ரக தொழில்நுட்பக் கருவிகளை கொண்டு அதிநவீன ரோபாட்டிக் ஆய்வகம் அமைக்கவும், அதன் மூலம் ரோபோக்களின் பயன்பாடு, வடிவமைத்தல் குறித்து கற்றுத்தரவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
News7 Tamil
இதன் மூலம், மருத்துவத் துறையில் பயன்படும் ரோபோக்களையும், நீருக்கு அடியில் மற்றும் வானிலும் பயணிக்கும் ரோபோக்களை வடிவமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையறிந்த முன்னாள் மாணவர்கள் சிலர், தாமாக முன்வந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளனர். 
News7 Tamil
மேலும், நடப்பு ஆண்டில் முன்னாள் மாணவர்களிடம் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி திரட்ட சென்னை ஐஐடி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் மாணவர்களின் நிதி மற்றும் சென்னை ஐஐடி-யின் பங்களிப்புடன் அதிநவீன ரோபாட்டிக் ஆய்வகம் விரைவில் கட்டப்பட இருப்பதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

credit ns7.tv