வியாழன், 9 ஜனவரி, 2020

ரயில் மறியல்...முழுஅடைப்பு.. போராட்டத்தில் குதித்த தொழிற்சங்கங்கள்!


Image
தொழிலாளர் சட்டசீர்திருத்தங்கள், தனியார்மயமாக்கள் மற்றும் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் முழு அடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றுது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகளும் பெரும் அளவில் இயக்கப்படாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஹவுராவில் தொழிற்சங்கத்தினர், ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டினர். புருத்வான் பகுதியில் போராட்டக்காரர்களால் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. 
helmat
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் அதன் தொழிற்சங்கத்தினர் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.
anthra
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றும் வரும் முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
kerala
மும்பையில் பாரத பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரத பெட்ரோலியத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

credit ns7.tv

Related Posts:

  • ஏற்காடு இடைத்தேர்தலில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தால் பா.ஜ.க.வை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும் என்ற கருத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து அல்ல. … Read More
  • மலாலா பகிஸ்தானியப் பெண் அல்ல – திடுக்கிடும் மர்மம்   மலாலா பாகிஸ்தானியக் குழந்தை அல்ல. அவளின் நிஜப்பெயர் ஜேன் (Jane). 1997 இல் ஹங்கேரி (Hungary) நாட்டில் பிறந்தாள். அவளது உண்மையான பெற்றோர்க… Read More
  • முன்னோர்களை பின்பற்றலாமா ?  ## நமது முன்னோர்கள் என்று யார் யாரெல்லாம் வாழ்ந்து மரணித்தார் களோ அவர்கள் எந்த முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்தார் களோ அந்த முறையில் தான் நாமு… Read More
  • தப்லீக் செல்லலாமா? தப்லீக்கில் செல்லலாமா தப்லீக் செல்லலாமா? சில பேர் மாதக்கணக்கில் தப்லீக் செல்வது சரியா? - விளக்கம் தேவை. முஹம்மது ஆரிப் நாம் அறிந்த சத்திய மார்க்கத… Read More
  • பேய், பிசாசு உண்டா ? அளவற்ற அருலாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...மனித வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை அளிக்கும் வாழ்க்கை நெறியே இ… Read More