செவ்வாய், 19 செப்டம்பர், 2017

வைகை நதியை தூய்மைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! September 19, 2017

வைகை நதியை தூய்மைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
வைகை நதியை தூய்மைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!


வைகை நதியை தூயமைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வைகை நதியை மாசுபடுத்துபவர்கள், மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும், வைகை நதியை தூய்மைப்படுத்தவும் உத்தரவிட கோரியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வைகை மாசுபடுவதை தடுக்க வைகை பாதுகாப்பு குழு உட்பட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு பூர்வாங்கப் பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. 

இதேபோல் மதுரை மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், மதுரையில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால் வைகையில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வைகை நதியை தூயமைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 6-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.