இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்றும், இதன் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஆளும் கட்சிக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், இது ஒரு பேடித்தனமான நடவடிக்கை என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
சபாநாயகரும், முதலமைச்சரும் கூட்டு சேர்ந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறிய ஸ்டாலின், ஆட்சியை தக்க வைத்து தப்பித்துக் கொள்ளலாம் என்று ஆளும் கட்சியினர் கனவு காண்பதாகவும் குற்றம்சாட்டினார்.
எல்லாவற்றையும் முன்கூட்டியே உணர்ந்துதான் திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் விரைவில் நீதிமன்றங்கள் மூலம் உரிய நீதி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.