திருச்சி மாவட்டம் முசிறி அடுத்துள்ள களத்தூர் கிராமத்தில் ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான கோயிலில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
களத்தூர் கிராமத்தில் ஈசனத்சுவரர் சிவாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் உள்ள வெளிப்பிரகார கல்வெட்டில் கமலரத மண்டபமும் மகா மண்டபமும் நெற்களஞ்சியமும் இருந்ததாக கூறுகிறது.
களத்தூர் கிராமத்தை குறித்த பதிவுகளுடன் சிறப்பு வாய்ந்த பழமையான வழிபாட்டுத்தலமாக இக்கோயில் இருந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதால் பாண்டியர்களுடன் தொடர்புடைய கோயிலாக இது கருதப்படுகிறது.
பழங்காலத்துடன் தொடர்புடைய கோயில் கல்வெட்டுகள் கண்டயிறப்பட்டது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.