கடல் நீர் உட்புகாமல் இருக்க 3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நீரொழுங்கியக்கியில் ஏற்பட்டுள்ள விரிசலை சீர் செய்ய வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே செங்காங்காடு கிராமம் கடலில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் வெள்ள நேரங்களிலும் கடல் சீற்றம் காரணமாக, செங்காங்காடு கிராமத்தில் கடல் நீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பொதுப்பணித்துறை மற்றம் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே அந்த பகுதி மக்கள் இந்த நீரொழுங்கியக்கியை உடனடியாக சீர்மைக்க வேண்டும் இல்லாவிட்டால் விரைவில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.