வியாழன், 14 டிசம்பர், 2017

​ஒரு ரூபாயில் விமான பயணம்! December 14, 2017

Image

தனியார் விமான நிறுவனமான ‘ஏர் டெக்கான்’ அறிமுக சலுகையாக ஒரு ரூபாயில் விமான சேவை அளிக்க திட்டமிட்டுள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல் பட்ட ஏர் டெக்கான் நிறுவனம் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் பங்குகளை 2008ம் ஆண்டு கிங் பிஷர் நிறுவனம் வாங்கியது. பின்னர் நஷ்டத்தை சந்தித்ததாக கூறி இந்நிறுவனம் 2012-ல்தனது சேவையை நிறுத்திக் கொண்டது. இந்நிலையில் மீண்டும் தனது விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர் டெக்கான் நிறுவனம் அறீவித்துள்ளது.

முதற்கட்டமாக அறிமுக சலுகையாக மும்பை நாசிக் இடையே ஒரு ரூபாய் கட்டணத்தில்  சேவயை அளிக்கவுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி முதலில் பயணம் செய்யும் ஒருசில அதிர்ஷ்டசாலி பயணிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைநகரங்கள், பெருநகரங்களை இணைக்கும் வகையில் சுமார் 128 வழித்தடங்களில் உள்நாட்டு விமானங்களை இணைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்திருந்தது. இதில், ஏர் ஒடிஷா 50 வழித்தடங்களையும், ஏர் டெக்கான் 34 வழித்தடங்களையும், அல்லையன்ஸ் ஏர், ஸ்பைஸ் ஜெட், ட்ரூஜெட் விமானசேவை நிறுவனங்கள் இதர இடங்களையும் பெற்றிருந்தன.

இந்த சேவைகளைப் பெற்ற நிறுவனங்கள் ஒரு சேவையில் பாதி பயணச்சீட்டுக்களை சலுகை விலையில் கொடுக்கலாம். இதற்கு, அந்நிறுவனங்களுக்கு அரசு மானியம் கிடைக்கும்.