சென்னை புதுப்பேட்டை அருகே உள்ள இணைப்பு சாலையில், சாலையோரமாக நின்ற மூன்று சொகுசு கார்கள் தீப்பிடித்து எரிந்தன.
சென்னை புதுப்பேட்டை கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே பென்ஸ், பி.எம்.டபிள்யூ, மற்றும் ஜீப் ஆகிய மூன்று வாகனங்கள் ஏற்கனவே பழுதாகிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அந்த வாகனங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் நீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துகின்றனர்.
source: puthiyathalaimurai tv