சனி, 9 டிசம்பர், 2017

மணி சங்கர் அய்யர் பற்றி ஒரு முக்கிய குறிப்பு...

மணி சங்கர் அய்யர் பற்றி ஒரு முக்கிய குறிப்பு...
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

அவர் பெயரில் அய்யர் என இருப்பதைக் குறித்து அவரை மதிப்பிட வேண்டாம். தான் மாட்டுக்கறி சாப்பிடுபவன் எனச் சொல்லி சர்ச்சைக்குள்ளானவர் அவர்.அவரது மனைவி ஒரு சீக்கியர்.
மணி சங்கர் அய்யரின் சகோதரரும் பொருளாதார நிபுணரும் பத்தி எழுத்தாளருமான சுவாமிநாதன் அங்கிலசேரிய அய்யரின் பதிவு ஒன்றை நான் மொழி பெயர்த்துப் பதிந்திருந்தேன். அதன் ஒரு பகுதி வருமாறு:
""என் அம்மா சற்றுக் கசப்போடு ஒரு முறை சொன்னது நினைவுக்கு வருகிறது. 'மதர் இன்டியா என்கிற சொல்லுக்கு வேறு யாரைக் காட்டிலும் நான்தான் அதிகம் பொருத்தமானவள்' என்றார் அவர். ஏன் தெரியுமா?அவளது மூத்த மகன் மணி சங்கர் ஒரு சீக்கியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். நான் இரண்டாவது மகன் ஒரு பார்சியை திருமணம் செய்து கொண்டேன். எல்லோருக்கும் இளையவன் முகுந்தன் ஒரு கிறிஸ்தவப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். மகள் தாரா ஒரு இந்துவைத் திருமணம் செய்து கொண்டாள். அம்மாவின் சகோதரி டாக்டர் அலங்காரம் ஒருமுஸ்லிமைத் திருமணம் செய்து கொண்டாள். அம்மா பக்தி நிறைந்த ஒரு இந்துப் பெண். கடைசி இரண்டு ஆண்டுகளில் சன்யாசம் மேற்கொண்டு ரிஷிகேசத்தில் சிவானந்த ஆச்ரமத்தில் கழித்தாள். எந்த RSS திரு உருவையும் விட 'பாரதமாதா’ என அழைக்க அவள் அதிகத் தகுதியானவள். அவளுக்கு மரியாதை செய்யும் முகமாக (வேண்டுமானால்) நான் 'மதர் இன்டியா கி ஜே', 'பாரத் மாதா கி ஜே' எனச் சொல்வேன்..."
ஸ்வாமிநாதன் அங்கிலசேரிய அய்யர் என்பதில் உள்ள இந்த 'அங்கிலசேரிய' என்பது அவரது பார்சி மனைவியின் பெயர். மனைவியர் மட்டுந்தான் கணவர் பெயரைத் தம் பெயரோடு இணத்துக் கொள்ள வேண்டுமா, நான் என் மனைவியின் பெயரை வைத்துக் கொள்கிறேன் என இணை்த்துக் கொண்டவர் இவர் என்பதையும் எங்கோ படித்துள்ளேன்..
"பாரத் மாதாகி ஜே" - என எல்லோரும் சொல்ல வேண்டும் என பரிவாரங்கள் சொன்னபோது அதைக் கண்டித்தார் சுவாமிநாதன். அதற்குக் கடும் எதிர்ப்புகள் வந்தது. அ[ப்போது எழுதிய குறிப்புதான் இது. அவரது அந்த முழுக் குறிப்பும் வாசிக்கத்தக்கது. முடிந்தால் தேடிப் பதிவிடுகிறேன்.
மணி சங்கர் அய்யரும் கூட தன் பெயரில் அய்யர் என வைத்துக் கொண்டாலும் சாதி, மதங்களை மீறித் திருமணம் செய்துகொண்டவர் என்பதோடு தான் மாட்டுக்கறி சாப்பிடுவதைச் சொல்லி சர்ச்சைக் குள்ளானவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
மணிசங்கர் அய்யரின் குடும்பம் ஒரு வித்தியாசமான, முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட ஒன்று. மோடி வகையறா அவர் மீது கொண்ட ஆத்திரத்திற்கு இந்தப் பின்னணியும் ஒரு காரணம். உறுதியாக மணி சங்கர் சாதி அடிப்படையில் 'நீசன்" என்கிற சொல்லைப் பயன்படுத்தி இருக்க மாட்டார். Marks

Related Posts: