செவ்வாய், 12 டிசம்பர், 2017

சங்கர் கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க காரணம் என்ன? December 12, 2017

Image

தமிழகத்தையே உலுக்கிய உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. தாயார் உட்பட 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

உடுமலை சங்கரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க முக்கிய காரணங்களாக அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் சங்கரநாரயணன் என்ன? 

1. ஒரு தலித்தை கொலை செய்தால் தூக்கு தண்டனை வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது! 

2. சாதி ஆண்வப்படுகொலை செய்தால் தூக்கு தண்டனை வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது! 

3. ஆதரவற்ற நிலையில் தனியாக மாட்டிக்கொண்டவர்களை கொலை செய்தால் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது! 

4. கூலிப்படையை வைத்து பணம் கொடுத்து கொலை செய்தால் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது! 

உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த நான்கு தீர்ப்புகளையும் மையமாக வைத்து சங்கர் கொலை வழக்கில் வழக்கறிஞர்கள் வாதாடியதால் சங்கரை கொலை செய்த குற்றவாளிகள் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு இரட்டை மரண தண்டனையும், சங்கரை கொலை செய்த கூலிப்படையினருக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.