தமிழகத்தையே உலுக்கிய உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
சங்கர் படுகொலை வழக்கின் முக்கிய நிகழ்வுகள்
➤12 ஜூலை 2015ல் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சங்கர் - கவுசல்யா சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
➤13 மார்ச் 2016ல் 22 வயதான சங்கர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
➤படுகாயம் அடைந்த சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு தலையில் 36 தையல்கள் போடப்பட்டன.
➤கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
➤கவுசல்யா பெற்றோர் உட்பட 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
➤12 மே 2016ல் கணவரை இழந்த கவுசல்யா தற்கொலை முயற்சி செய்தார்.
➤ஜூன் 2016 ல் கவுசல்யாவுக்கு ஓய்வூதியம் மற்றும் சங்கரின் தந்தைக்கு சத்துணவு துறையில் வேலை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
➤மார்ச் 2017ல் மத்திய அரசு பணிக்கான தேர்வில் கவுசல்யா வெற்றி பெற்றார்.
➤12 டிசம்பர் 2017ல் உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் 8 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
➤கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தாயார் உட்பட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
➤ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.