வெள்ளி, 15 டிசம்பர், 2017

உக்கிரத்தில் அரசியல் - நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது! December 15, 2017

Image

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல், வரும் ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தொடரின் போது குளிர்கால கூட்டத்தொடரை தாமதமாக கூட்டியது குறித்து எதிர்கட்சிகள் பிரச்சினை எழுப்ப திட்டமிட்டுள்ளன. கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர், நவம்பர் 16-ம் தேதியன்றே தொடங்கியது.

ஆனால் இந்த ஆண்டு குஜராத் தேர்தலையொட்டி கூட்டத்தொடரை பாஜக அரசு தாமதமாக கூட்டியதாக கூறப்படுகிறது.  முன்னதாக நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

Related Posts: