வெள்ளி, 15 டிசம்பர், 2017

ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது! December 15, 2017

Image

சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தினேஷ் சவுத்ரி என்பவர் ராஜஸ்தானில் அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சுற்றி வளைத்த  தனிப்படையினர், கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கொள்ளையர்கள் துப்பாக்கியால் போலீசாரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பெரிய பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக இறங்கினர். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே ராஜஸ்தானில் கொள்ளை வழக்கு ஒன்றில் கைதான தினேஷ் சவுத்ரிக்கு, கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து  ஜோத்பூரில் பதுங்கி இருந்த  தினேஷ் சவுத்ரியை சுற்றிவளைத்து அம்மாநில போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடியவர்களை பிடிக்கும் முயற்சியிலும் தொடர்ந்து  ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தானில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொள்ளையர்களால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த தாம்புரா கிராமத்தில், சென்னை மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சந்தோஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். அவர் அம்மாநில போலீசாருடன் சம்பவம் தொடர்பாக ஆலோசனையும் நடத்தினார்.