கன்னியாகுமரி மாவட்டத்தை சீர்குலைத்த ஓகி புயலால், 1000-க்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர். மீனவர்கள் மாயமானது முதல் இதுவரை நடந்தது...
ஓகி புயலால் மீனவர்கள் மாயம்... இதுவரை நடந்தது என்ன?
நவம்பர் 29
➤ஓகி புயலால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 16 மணி நேரத்துக்கு மேலாக கனமழை.
➤20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், 967 வீடுகள் 3,728 மின்கம்பங்கள் சேதம்
➤கன்னியாகுமரியில் 5 பேர் பலி-தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு
➤கடலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை
டிசம்பர் 1
➤ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உதவிகள் செய்யத் தயார் - பிரதமர் மோடி
டிசம்பர் 2
➤கடலுக்குச் சென்ற மீனவர்களை கண்டுபிடித்துத் தரக்கோரி மீனவர் குடும்பத்தினர் சாலை மறியல்
➤நடுக்கடலில் தத்தளிக்கும், மாயமான மீனவர்களை மீட்க உத்தரவு - பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
➤கடலுக்குச் சென்ற 830 மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள் 28 பேர் மாயம் - மீனவர் பிரதிநிதிகள்
➤737 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் - அமைச்சர் ஜெயக்குமார்
➤கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பார்வையிட்டார்
டிசம்பர் 3
➤கரை திரும்பாத மீனவர்கள் எண்ணிக்கை 1200க்கும் மேல் என தகவல்
➤837 மீனவர்கள் கர்நாடகா, மகாராஷ்டிராவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்
➤காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் 11 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன
➤காணாமல் போன தமிழக மீனவர்கள் 71 பேர், கேரள மீனவர்கள் 183 பேர் மீட்பு - நிர்மலா சீத்தாராமன்
டிசம்பர் 4
➤கேரள கடற்கரையில் 18 மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின
➤நாகர்கோவில், கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் மீட்பு
➤காணாமல் போன 294 மீனவர்களில், 220 மீனவர்கள் பத்திரமாக மீட்பு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
டிசம்பர் 5
➤லட்சத்தீவில் கடலோரக் காவல்படையால் 58 தமிழக மீனவர்கள் மீட்பு
➤ஓகி புயல் பாதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு - உயர்நீதிமன்றம்
டிசம்பர் 6
➤திருவனந்தபுரம் மருத்துவமனையில் உள்ள 9 மீனவர் உடல்களை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காண முடிவு
➤ஓகி புயலால் திசைமாறிய 1,092 மீனவர்கள், லட்சத்தீவு, மகாராஷ்டிராவில் தஞ்சம்
டிசம்பர் 7
➤பலியான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் ஆறுதல்
➤காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி கன்னியாகுமரியில் 10,000-க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல்
➤1,013 மீனவர்கள் கரை திரும்பவில்லை - மீனவ குடும்பங்கள் தகவல்
➤கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
➤ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் - முதல்வர் பழனிசாமி
டிசம்பர் 8
➤மீனவர்களை மீட்கக்கோரி குளச்சலில் 8,000-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் - 4 மணி நேர போராட்டத்திற்கு பின் வாபஸ்
➤சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் மீனவ பிரதிநிதிகளை முதல்வர் பழனிசாமி சந்தித்தார்
➤தமிழக மீனவர்கள் 2805 பேர், 5 மாநிலங்களில் பத்திரமாக உள்ளனர் - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
ஆனால் தற்போதும் ஓகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரியில் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.