
வேலூரில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மருத்துவக்கழிவுகளைக் கொட்ட எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவக் கழிவுகள் சரிவரக் கையாளப்படுவதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் வசிக்கும் பகுதி அருகே கழிவுகள் கொட்டி தீ வைக்கப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
மருத்துவக் கழிவுகளை கையாள தனியாக நிதி ஒதுக்கப்பட்டுவரும் நிலையில் அந்த நிதியின் பயன்பாடு குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. மருத்துவமனைக் கழிவுகளே மக்களை மருத்துவமனைக்கு வர வைக்கும் சூழல் போக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.