
சிவகங்கையில் மத்திய அரசு பள்ளியின் வாயிலில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவிலை வருவாய்த்துறையினர் அகற்றினர்.
சிவகங்கை அல்லூர் செல்லும் வழியில் மத்திய அரசிற்கு சொந்தமான கேந்த்ரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வாயிலை ஒட்டி சாலை ஓரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக விநாயகர் கோவில் சமீப காலத்தில் கட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த கோவிலால் பள்ளிக்கு வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், பள்ளியின் வாயிலில் இருந்த கோவிலை வருவாய்த்துறையினர் இன்று அகற்றினர்.
2 ஜேசிபி உதவியுடன் கோவில் இடிக்கப்பட்ட நிலையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்க ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.