வியாழன், 8 பிப்ரவரி, 2018

வரலாற்றைத் தெரிந்து கொள்ள மோடி சில புத்தகங்களை படிக்க வேண்டும் - பட்டியல் தரும் மொய்லி! February 7, 2018

Image

பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் குறித்து உரையாற்றினார். ஆனால், மோடியின் உரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டன. ‘பொய் பேச்சை நிறுத்துங்கள்’ என்று எதிர்க்கட்சிகள் கோஷமிட்டன. இதனையடுத்து, கடும் ஆவேசத்துடன் பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் என்னை பேசவிடாமல் அமளி செய்வது வேதனையளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், மோடி தனது பேச்சில் நேரு முதல் பிரதமராக இல்லாமல் சர்தார் வல்லபாய் பிரதமராக இருந்திருந்தால் காஷ்மீர் பிரச்னையே ஏற்பட்டிருக்காது என்று குறிப்பிட்டார். 
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, ‘மோடி சொல்வது அவருடைய வரலாறு... அவர் தெரிந்துவைத்திருக்கும் வரலாறு வக்கிரமானது. அவர் டிஸ்கவரி ஆப் இண்டியா, க்ளிம்சஸ் ஆப் வேர்ல்டு ஹிஸ்ட்ரி, காந்தியின் சத்திய சோதனை போன்ற புத்தகங்களைப் படிக்க வேண்டும். நாங்கள் அவருக்கு இந்த புத்தகங்களை பரிந்துரைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.