தகவல் பரிமாற்றத்திற்கு உலகின் பெரும்பாலனவர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் செயலியில் புதிய சுவாரசியமான அம்சம் ஒன்று புகுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்பில் நாம் இதுவரையில் தனியாகவே ஒருவருடன் வீடியோ கால் மூலம் பேசும் இருந்து வருகிறது, விரைவில் குழுவாக வீடீயோ கான்ஃபரசிங் மூலம் பேசும் வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தற்போது சோதனை முறையில் ஆண்ட்ராய்ட் பீட்டா எடிஷனில் சோதிக்கப்பட்டு வரும் இந்த வசதி விரைவில் வாட்ஸ் அப்பின் அப்டேட் செய்யப்பட இருக்கும் என தெரிகிறது.
வாட்ஸ் அப் பயன்பாட்டை மேலும் வசீகரிக்கும் வகையில் இந்த வீடியோ கான்ஃபரன்சிங் வசதி இருக்கும் என்று பயனாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந்த குழு வீடியோ கால் வசதி அறிமுகமானால் வீடியோ கால் வசதியினை அளிக்கும் ஸ்கைப், IMO உள்ளிட்ட செயலிகளின் பயன்பாடு குறைந்து போகவும் வாய்ப்பு ஏற்படும்.
இது மட்டுமல்லாமல் ஃபேஸ்புக்கில் உள்ளது போன்று பல்வேறு விதமான ஸ்டிக்கர்களையும் வாட்ஸ் அப்பில் புகுத்த இருக்கின்றனர். இந்த புதிய அம்சங்கள் இணைவதன் வாயிலாக நமது வாட்ஸ் அப் உரையாடல்கள் மேலும் சுவாரஸ்யம் கொண்டதாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. வாட்ஸ் அப் செயலி ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
முதலில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்றும் ஐஓஎஸ், விண்டோஸ் இயங்குதளங்களில் பின்னர் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.