வெள்ளி, 2 மார்ச், 2018

மணிலா பயிரின் விலை கடும் வீழ்ச்சி ! March 1, 2018

Image

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மணிலா பயிரின் விலை கடும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 7,000 ஹெக்டேரில் எண்ணெய் பயிரான மணிலா பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது மணிலா பயிர் அறுவடை நடைபெற்று வருவதால், குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு மணிலா பயிரின் வரத்து அதிகரித்துள்ளது. 

மணிலா பயிரின் வரத்து அதிகரிப்பால் மணிலாவின் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 80 கிலோ அளவிலான மணிலா மூட்டை, ரூ.6,800 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது 4600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

மேலும்,தோராயமாக மணிலா மூட்டை ஒன்றிக்கு 1,500 ரூபாய்க்கு வரை நஷ்டம் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ள அவர்கள், மணிலா பயிர் விலை நிர்ணயம் செய்வதில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.