பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்துள்ள தெலுங்குதேசம் கட்சியின் செயல்பாட்டை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடிக்கும் மத்திய அரசை அதிமுக தட்டிக் கேட்க வேண்டும் எனறும் கூறினார். மத்திய அரசுக்கு அதிமுக அரசு உரிய அழுத்தம் தரவில்லை என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், தெலுங்கு தேசம் கட்சியின் தைரியம் அதிமுகவுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து, திராவிட நாடு கொள்கையை மீண்டும் வலுப்படுத்தும், சூழல் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டபோது, அவ்வாறு திராவிட நாடு கொள்கை வலுப்பெற்றால், அதனை திமுக வரவேற்கும், என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.