வெள்ளி, 2 மார்ச், 2018

இந்தியாவிலேயே முதல் முறையாக மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க புதிய உதவி மைய எண்! March 2, 2018

Image



கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்து வருவதாக தெரிவித்தார். 

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனவும், குறிப்பிட்ட காலத்திற்குள் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் கூறினார். 

தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை சரி செய்ய, தனியார் நிறுவனம் மூலம் மாணவர்களின் வீட்டிற்கு சென்று கவுன்சிலிங் வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக கூறினார். 

மாணவர்களுக்கு உதவும் வகையில் 24 மணிநேரமும் செயல்படும் உதவி மைய எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், சமூக சேவை செய்யும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, எந்தவிதமான ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தருவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.