சனி, 3 மார்ச், 2018

சிரிய அரசை கண்டித்து சென்னையில் ஆர்பாட்டம்..! March 2, 2018

Image


சிரியாவின் உள்நாட்டு போர் விவகாரத்தில் ஐநா சபை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சென்னையில் நடந்த போராட்டத்தில் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சிரியாவில் அரசுக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே நடக்கும் போரில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஐநா சபை உடனடியாக தலையிட்டு அமைதியை ஏற்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிரியாவிற்கு ஐநா அமைதிப்படையை அனுப்ப வேண்டும் எனவும், பிரதமர் மோடி இப்பிரச்சனையில் தலையிட்டு சிரியாவிற்கு தம்முடைய கண்டனத்தை தெரிவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர். மேலும் அப்பாவி மக்களையும், பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்யும் சிரிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

Related Posts: