ஈரோட்டில் வழக்குப்பதிவு செய்ய 5000 ரூபாய் கொடுக்க முடியாததால், புகார் கொடுக்கச் சென்றவரின் செல்போனை அடமானமாக வைத்துக் கொண்ட காவல் உதவி ஆய்வாளரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த முருகன் என்பவர், முன் விரோதம் காரணமாக உறவினர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் உதவி ஆய்வாளர் சமாதான பிரபு என்பவரிடம் முருகன் புகார் மனு அளித்துள்ளார்.
புகார் மீது வழக்கு பதிவு செய்ய உதவி ஆய்வாளர் 5000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. முருகனிடம் பணம் இல்லாததால், அவரின் செல்போனை அவர் பறித்துச் சென்றதாக தெரிகிறது.
உதவி ஆய்வாளரின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட முருகனின் மகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார்மனு அளித்தார்.