வியாழன், 12 ஏப்ரல், 2018

20 கோடி ரூபாய்க்கு மேல் ஏலத்தில் விடப்பட்ட டைனோசரின் எலும்புக்கூடு! April 12, 2018

Image


பிரான்ஸ் நாட்டில்  அரியவகை டைனோசரின் எலும்புக் கூடுகள், 20 கோடி ரூபாய்க்கு மேல் ஏலத்தில் விடப்பட்டன. 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பினஸ் மற்றும் ஜிகேலோ ஏல அலுவலகத்தில் டைனோசர்களின் எலும்புக் கூடுகள் ஏலத்தில் விடப்பட்டது. இதில் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அல்சோரஸ் வகை டைனோசரின் எலும்புக் கூடுகளை வாங்க ஏல நிறுவனங்கள் போட்டி போட்டன.  

இறுதியில் மூன்று புள்ளி 8 மீட்டர் நீளமுள்ள அல்சோரஸ் வகை டைனோசர் 10 கோடி ரூபாய்க்கு விலை போனது.  இதேபோன்று 12 மீட்டர் நீளமுள்ள டிப்லோடாகஸின் எலும்புக்கூடும் 10 கோடிக்கு ஏலத்தில்  விடப்பட்டது.  

அல்சோரஸ் வகை டைனோசரின் எலும்புகளை பொருத்தமான பகுதிகளில் இணைக்கவும், கிடைக்காத பாகங்களை உருவாக்கிச் சேர்க்கவும்  ஆறு மாத காலம் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.