வியாழன், 12 ஏப்ரல், 2018

பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் தீக்குளித்தவர் உயிரிழப்பு! April 12, 2018

Image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, ஈரோட்டை சேர்ந்த தர்மலிங்கம், தீக்குளித்து உயிரிழந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த தர்மலிங்கம்(25 வயது) , தனது பாட்டியுடன் வசித்துவந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக தொலைக்காட்சியை பார்த்த தர்மலிங்கம், மிகவும் மன இறுக்கத்துடனே இருந்திருக்கிறார்.

தர்மலிங்கம், இன்று காலை மூன்று மணியளவில் தீக்குளித்துள்ளார். உடனே, அக்கம்பக்கத்தினர், தர்மலிங்கத்தை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், 95 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டிருந்ததால், இன்று காலை 8. 45 மணியளவில், தர்மலிங்கம் உயிரிழந்தார்.

தற்கொலைக்கு காரணம் பற்றி தர்மலிங்கம் ஏதாவது எழுதிவைத்துள்ளாரா என்று வீட்டில் சோதனைசெய்தபொழுது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து, தீக்குளித்ததாக சுவரில் எழுதிவைத்துள்ளார்.  மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.