10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக, சர்வதேச சுகாதார அமைப்பு கூறியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் புற்றுநோய் அதிகரித்து வருவது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு, தனது ஆய்வறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் 11,60,000 பேர், புதிதாக புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானதாகவும், எதிர்காலத்தில் 10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் என்றும், இதில், 15 இந்தியர்களில் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பார், என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலானோருக்கு புகையிலை காரணமாகவே, புற்றுநோய் ஏற்படுவதாகவும், இந்த வகை புற்றுநோய் ஆண்களுக்கு பெரும்பாலும் வாய் பகுதியிலும், பெண்களுக்கு கழுத்துப் பகுதியிலும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வகை புற்றுநோய், சாதாரண மக்களை அதிகம் தாக்குவதாகவும், உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுபோல், மார்பக புற்றுநோய் மற்றும் அதிக உடல் உடை மற்றும் குறைந்த உழைப்பு கொண்ட வாழ்க்கை முறையால் ஏற்படும் புற்றுநோய், பொருளாதாரத்தில் வசதியான நிலையில் இருப்பவர்களையே அதிகம் தாக்குவதாகவும், அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv