நடிகர் ரஜினிகாந்திற்கு இன்னும் அரசியல் புரியவில்லை என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி நுழைவாயில் முன்பு கையெழுத்து பெறப்பட்டது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களிடம் கையெழுத்து பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கையெழுத்து இயக்கத்தில் மாணவர்கள் தன்னெழுச்சியாக வந்த கையெழுத்திட்டு செல்வதாக கூறினார். குடியுரிமை சட்டம் பற்றி ரஜினி தெரிவித்த கருத்து குறித்து உதயநிதியுடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு ரஜினி தனது அரசியல் கொள்கைகளை கூறிய பின் தாம் கருத்து தெரிவிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
credit ns7.tv






