credit ns7.tv
தேசிய மக்கள் தொகை பதிவேடு நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான விவாத்தின் மீது எம்.பி.திருமாவளவன் பேசினார். அப்போது அவர், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை முற்றிலுமாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். தேசிய மக்கள்தொகை பதிவேடு, நாட்டு மக்களையும், சமூகத்தையும் பிளவுப்படுத்தக் கூடியது என சாடிய திருமாவளவன், குடியுரிமை திருத்த சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசு மதவாத அரசாக இருப்பதாகவும் திருமாவளவன் மக்களவையில் குற்றஞ்சாட்டினார்.