புதன், 5 பிப்ரவரி, 2020

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கில், சட்டப்பேரவை செயலாளர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் நோட்டீஸ் மீது சபாநாயகர் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறினார். 
photo
தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 11 பேரை தகுதி நீக்கம் செய்ய கொடுத்த நோட்டீஸ் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து, சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட நோட்டீஸ் மீது அவர் எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.  
photo
இதற்கு பதில் அளிக்க 2 வாரம் கால அவகாசம் வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், சபாநாயகர் எப்போது நடவடிக்கை எடுக்க போகிறார் என்பது தொடர்பாக பதிலளிக்க சட்டப்பேரவை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.
credit ns7.tv