பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2020-21ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில், நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டதுடன், பட்ஜெட்டில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பச்சை வகைப்பாடு தொழிற்சாலைகளை நேரடியாக இயக்குவதற்கான DIRECT CTO திட்டத்திற்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
credit ns 7.tv