திங்கள், 10 பிப்ரவரி, 2020

காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்,

10.02.2020 -காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும், என்ற முதல்வரின் அறிவிப்பை வரவேற்று நெடுவாசல் பகுதி மக்கள், பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அமைச்சரவை, கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி  ஒப்புதல் வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மேற்கொண்ட போராட்டம், நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது.  இதனையடுத்து  இத்திட்டம் கைவிடப்படுவதாக அறிவிப்பு வெளியிட்ட போதிலும், மீண்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படும், என்ற மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரின் அறிவிப்பு, இப்பகுதி மக்களை கலக்கமடைய செய்தது. 
Farmers
இந்நிலையில், இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று வெளியிட்ட அறிவிப்பு இப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.