திங்கள், 10 பிப்ரவரி, 2020

உலக சுகாதார அமைப்பு சீனா செல்ல உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 813ஆக உயிர்ந்துள்ள நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு சீனா செல்ல உள்ளது. 
2003-2004ஆம் ஆண்டுகளில் சார்ஸ் வைரஸ் தாக்குதலை விட பெரியளவில் உருவெடுத்துள்ளது கொரோனா வைரஸ் தாக்குதல். நாளுக்கு நாள் இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவில் அதிகபட்சமாக பிப்ரவரி 8ஆம் தேதி மட்டும் 89 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச அளவில் கொரோனாவால் 813 பேர் பலியாகி உள்ள நிலையில், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் 3 லட்சத்து 71 ஆயிரத்து 905 பேர் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 183 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை  கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 649 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.