வியாழன், 6 பிப்ரவரி, 2020

#CoronaVirus: எத்தனை நாடுகளில் எத்தனை பேருக்கு பாதிப்பு?

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து உலகை அச்சுறுத்தும் மிகக்கொடிய வைரஸாக கொரோனா மாறியிருக்கிறது. இன்று வரை இதற்கு தீர்வு தரக்கூடிய தடுப்பு மருந்தை மருத்துவர்கள் கண்டறியவில்லை என்றே கூறப்படுகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500ஐ நெருங்குகிறது. 
24,500 பேர் இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 492 பேர் பலியாகியிருக்கின்றனர்.
  • சீனாவிலிருந்து ஹாங்காங்கிற்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி, கண்காணிப்பில் வைக்கப்படுப்படுவர், இது சீனர்கள் மட்டுமல்லாது ஹாங்காங் குடிமக்களுக்கும் பொருந்தும் என ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.
ஹாங்காங்கில் இதுவரை 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பகுதி தன்னாட்சி அரசான ஹாங்காங் இதுவரை சீனாவுடனான 4 எல்லைகளை மூடியுள்ளது. எனினும் அனைத்து எல்லைகளையும் மூடமுடியாது ஏனெனில் சீனாவிலிருந்து திரும்பும் பயணிகளில் 60% பேர் ஹாங்காங்கை சேர்ந்தவர்கள் என அந்நாடு தெரிவித்துள்ளது.
சீனாவுடனான எல்லையை முற்றிலும் மூட வேண்டுமென்ற கோரிக்கையுடன் ஹாங்காங் மருத்துவ ஊழியர்கள் சம்மேளனம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Wuhan
  • ஹாங்காங்கை சேர்ந்த கேதே பசிஃபிக் விமான நிறுவனம் தனது 27,000 ஊழியர்களையும் 3 வாரத்திற்கு சம்பளமில்லா விடுமுறை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஹாங்காங்கில் நடந்து வந்த அரசியல் ரீதியிலான போராட்டங்கள் காரணமாக ஏற்கெனவே கேதே பசிஃபிக் நிறுவனம் தடுமாற்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
  • கொரோனா வைரஸின் பிறப்பிடமான வுஹானுக்கு சென்று வந்ததை மறைத்து பலருக்கும் கொரோனா வைரஸை பரப்பியதற்காக சில நகரங்களில், பலர் மீது சீன காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.
  • தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த  ஒருவர் குணப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
சீனா தவிர்த்து எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ?
china
1. ஆஸ்திரேலியா - 13
2. பெல்ஜியம் - 1
3. கம்போடியா - 1
4. கனடா - 5
5. பின்லாந்து - 1
6. பிரான்ஸ் - 6
7. ஜெர்மனி - 12
8. ஹாங்காங் - 21 ( ஒருவர் மரணம்)
9. இந்தியா - 3
10. இத்தாலி - 2
11. ஜப்பான் - 23 (10 பேர் சொகுசு கப்பலில்)
12. மக்காவ் - 10
13. மலேசியா - 10
14. நேபாளம் - 1
15. பிலிப்பைன்ஸ் - 3 ( ஒருவர் மரணம்)
16. ரஷ்யா - 2
17. சிங்கப்பூர் - 24
18. தென்கொரியா - 18
19. ஸ்பெயின் - 1
20. இலங்கை - 1
21. ஸ்வீடன் - 1
22. தைவான் - 11
23. தாய்லாந்து - 25
24. ஐக்கிய அரபு அமீரகம் - 5
25. அமெரிக்கா - 11
26. இங்கிலாந்து - 2
27. வியட்நாம் - 10
credit ns7.tv