வியாழன், 6 பிப்ரவரி, 2020

ரஜினிகாந்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மறைமுகமாக பதிலடி!

Image
மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதாக ஒலிக்கும் குரல்கள் புதிதல்ல என ரஜினிகாந்துக்கு திமுக தலைவர், ஸ்டாலின் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்திற்கு, மாணவர்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கையெழுத்தி இயக்கத்தில் மாணவர்கள் பேரார்வத்துடன் திரளாக பங்கேற்று கையெழுத்திடுவது தமக்கு மகிழ்ச்சி நிறைந்த ஆச்சரியத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதாக ஒலிக்கும் குரல்கள் புதிதல்ல எனவும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதும் ஆதிக்க மனப்பான்மையினரும் அப்படித்தான் திரித்துச்சொல்லி, திசை திருப்பப் பார்த்தார்கள் என்றும், மாணவர் போராட்டங்கள் குறித்த, ரஜினிகாந்தின் கருத்துக்கு, மு.க.ஸ்டாலின் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
credit ns7.tv

Related Posts: