வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

உச்சநீதிமன்றம் நமக்காக எதுவும் செய்யாது; நாம் தான் போராடி பெற வேண்டும் - முன்னாள் நீதிபதி பரபரப்பு கருத்து

Image
சிஏஏ மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இயல்பு வாழ்க்கை திரும்பாதது பற்றி கேட்காத உச்சநீதிமன்றம் நமக்காக எதுவும் செய்யாது நாம் தான் போராடி பெற வேண்டும் என ஓய்வு பெற்ற நீதியரசர் ஹரி பரந்தாமன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை, காமராசர் அரங்கித்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்து குடியுரிமை காப்போம், குடியரசை காப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருதரங்கத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவரூல்லா, ஒய்வு பெற்ற நீதியரசர் ஹரி பரந்தாமன், முன்னாள். ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில், பிரின்ஸ் கஜேந்திர பாபு, பேராசிரியர் அருணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
ஓய்வு பெற்ற நீதியரசர் ஹரி பரந்தாமன் பேசுகையில், இந்திய வரலாற்றில் இவ்வாறான இந்தியா முழுவதுமான போராட்டத்தை பார்த்தது இல்லை. மாணவர்கள், இடதுசாரிகள், சமூக ஆர்வலர்கள், இஸ்லாமிய மக்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் போராடி வருகிறார்கள். இதுவே நமக்கான முதல் வெற்றியாக பார்க்கிறேன் என்றார்.
மேலும், இதை மிகப்பெரிய இயக்கமாக போராட வைத்து ஒருங்கிணைத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய அவர், என்.ஆர்.சி மற்றும் சிஏஏ வுக்கு, எதிராக அவற்றையெல்லாம் வேண்டாம் என்ற ஒற்றை கோரிக்கையாக வைத்து அனைத்து மக்களும் போராடி வருகிறோம் என்றார். அதோடு, 11 மாநிலங்களில் இதற்கான எதிர்ப்பு இருக்கிறது. முத்தாலாக், 370 நீக்கம், மாட்டு கறி என எதற்காகவும் ஒருங்கிணையாத கூட்டம் தற்போது சேர்ந்து போராடுவது அவர்களுக்கு பயத்தை விளைவித்து இருக்கிறது என்று கூறினார்.
என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி திட்டத்தை அமல் படுத்தியவர் வாஜ்பாய் அரசு தான் என சாடிய ஹரி பரந்தாமன், நடிகர் ரஜினி கண்டனம் தெரிவித்து, அவர் மாணவர்களை மிரட்டுகிறார், மேலும் இது வரை போராட்ட களத்தில் 30 இஸ்லாமிய மக்கள் உயிரை துறந்துள்ளனர். அவர்களை பற்றி இவர் ஏதாவது பேசுவாரா இந்த நடிகர் என கேள்வி எழுப்பினார்.
உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் என்ற உயர்மட்ட நீதிபதி குழுவுக்கு அழுத்தம் இருக்கிறது. இதுவரை சிஏஏ மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. இதைப் பற்றி கேட்காத உச்சநீதிமன்றம் நமக்காக எதுவும் செய்யாது நாம் தான் போராடி பெற வேண்டும் என்று ஹரிபரந்தாமன் பேசினார். 
credit ns7.tv