செவ்வாய், 9 ஜூன், 2020

வன்முறை ஒரு போதும் வெல்லாது... காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் ட்வீட்!

“வன்முறை ஒருபோதும் வெல்லாது” என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட அஜய் பண்டிதாவின் குடும்பத்திற்கு ராகுல் காந்தி தனது ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்துள்ளார்.

அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் காஷ்மீரில் உள்ள அனந்த்நாகில் நடத்திய தாக்குதலில் அஜய் பண்டிதா சுட்டுக் கொல்லப்பட்டார்.திங்கட்கிழமை மாலை நடந்த இந்த சம்பவம் காஷ்மீர் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அஜய் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆவர்.

இந்நிலையில், அஜய் பண்டிதாவின் குடும்பத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதைப்பற்றி ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ ஜனநாயக வழிமுறைகளுக்காக உயிரை தியாகம் செய்த அஜய் பண்டிதாவின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன், இந்த வருத்தத்திலும் நாங்கள் உங்களுடன் இருப்போம் என உறுதியளிக்கிறேன்.” என்றார்.

மேலும், வன்முறை ஒருபோதும் வெல்லாது. எந்த ஒரு விவகாரத்திலும் வன்முறை சாரியான தீர்வை வழங்காது என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.

அஜய் மரணம் குறித்து முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுப்பற்றி விசாரிக்கும் காவலர் கூறியிருப்பதாவது, “சம்பவதன்று அஜய் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். திடீரென்று அந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் அஜய் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அஜய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  அஜய் தோள்பட்டை மற்றும் முகத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பின் இருக்கும் காரணம் குறித்து இதுவரை துப்பு விலங்கவில்லை. தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. “ என்றார்.


Related Posts: