ஞாயிறு, 21 ஜூன், 2020

குழந்தைகள் மொபைல்களை அதிகம் உபயோகிப்பது குறித்து பெற்றோர் கவலை

குழந்தைகள் ஆன்லைனில் தேவையற்ற தகவல்களை தெரியாமல் அணுக வாய்ப்பு இருப்பதாக பெற்றோர் மிகப்பெரிய கவலையில் இருக்கின்றனர்.
இந்த ஊரடங்கு காலகட்டத்தில் தங்கள் குழந்தைகள் கம்ப்யூட்டர், மொபைல் போன்ற திரைகளின் முன்பு குறிப்பிட்ட நேரம் செலவிடப்படுவது குறித்து பெற்றோர் தொடர் கவலையில் இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் தெரிய வந்துள்ளது.

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் வழியே கற்பது என்பது புதிய முறையாக மாறியிருக்கிறது. இதனால், குழந்தைகள் தங்களது பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்திருக்கவும், தங்களின் சொந்த பொழுது போக்குக்காகவும் தங்களின் மொபைல், கம்ப்யூட்டர் சாதனங்களில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர்.

இது குறித்து ஓஎல்எக்ஸ்(OLX) நிறுவனம் நடத்திய சர்வேயில் 5 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கேற்றனர். அவர்கள் ஆன்லைனில் தொடர்து பாதுகாப்புடன் இருப்பதற்கு தயார்படுத்திக் கொள்வதற்கும் அவர்களின் விழிப்புணர்வின் நிலையைப் புரிந்து கொள்வதற்கும் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. பெரிய அளவில் பதில் அளித்த 84 சதவிகிதம் பேர் குழந்தைகள் திரைகளை பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் அதிகரித்திருப்பது குறித்து மிகவும் கவலையில் இருப்பதாக கூறி இருக்கின்றனர். 54 சதவிகிதம் பேர், தங்களின் குழந்தைகள் திரைகளின் முன்பு செலவிடும் நேரம் ஐந்து மணி நேரம் அதிகரித்திருப்பதாகக் கூறி உள்ளனர்.

ஆனால், குழந்தைகள் ஆன்லைனில் தேவையற்ற தகவல்களை தெரியாமல் அணுக வாய்ப்பு இருப்பதாக அல்லது கல்வி சாராத தகவல்களை அவர்கள் அணுகுவதை நியாயப்படுத்த படிப்பை பயன்படுத்தலாம் என்று பெற்றோர் மிகப்பெரிய கவலையில் இருக்கின்றனர். பதில் அளித்த 57 சதவிகிதம்பேர் , ஆன்லைனில் பாதிக்கப்படாதவாறு தங்கள் குழந்தைகளை பாதுகாக்க உறுதியான ஆன்லைன் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளவில்லை என்று இவ்வாறு பெற்றோர் உணர்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.

டீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோர் மேலும் சாதாரணமாகவே இருக்கின்றனர் என்று சர்வேயில் தெரியவந்துள்ளது. சர்வேயில் பங்கேற்றவர்களில் 75 சதவிகிதம் பேர் தங்கள் குழந்தைகள் ஆன்லைனில் இருந்து பாதுகாக்க எந்த ஒரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். 5-10 வயது வரை உள்ள குழந்தைகளைக் கொண்ட பெற்றோர் அதே கருத்தை அமோதிக்கின்றனர். இணையதள பயன்பாட்டின் அபாயங்கள் குறித்து பெற்றோர் தெரிந்து வைத்திருக்கின்றனர். அதில் 71சதவிகிதம் பேர் அது குறித்து தங்கள் குழந்தைகளிடம் பேசுகின்றனர். குழந்தைகளுக்கு போதிக்கின்றனர் என்றுசர்வே சொல்கிறது. எனினும் 61 சதவிகிதப் பெற்றோர், குறிப்பாக ஊரடங்கு காலகட்டத்தில் தங்கள் குழந்தைகள் பார்க்கும் தகவல்களை உண்மையிலேயே கண்காணித்து வருவதாகச் சொல்கின்றனர்.

“நமது நடமாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் முன் எப்போதும் இல்லாத வகையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கும் பொழுது போக்குவதற்காகவும் பள்ளிகளுக்காகவும், பணிகளுக்காகவும் இணையத்தை சார்ந்திருக்கும் நிலை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. மொபைல்போன்கள் மற்றும் டெப்லெட்கள் என்ற இந்த காலகட்டத்தில் குழந்தைகள் தங்கள் வீட்டுப் பாடங்களை மேற்கொள்வதற்காகவும், சமூகத்தில் தொடர்பில் இருப்பதற்காகவும் ஆன்லைன் கேம்கள் விடையாடுவதற்கும் தங்களுக்கு சொந்தமாக கம்ப்யூட்டர்களைப் பெற முடிகிறது.அவர்கள் ஆன்லைனிலேயே இருப்பது அபாயங்களை அதிகரிக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. தங்கள் குழந்தைகள் ஆன்லைன் அபாயத்தில் அம்பலப்படுத்தப்படக் கூடும் என்று பெற்றோர், அறிந்தே இருக்கின்றனர். எனினும் அவர்களின் ஆன்லைன் பழக்கத்தை கட்டுபடுத்தும் முன் முயற்சிகளை எடுப்பதில் பெற்றோர் குறைபாடு கொண்டிருக்கின்றனர்” என்று இந்த சர்வேயின் கண்டுபிடிப்புகள் குறித்து ஓஎல்எக்ஸ் இந்தியாவின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் இயக்குநர் அகான்ஸா தமிஜா கூறுகிறார்.

திரைகளால் பாதிக்கப்படக் கூடிய மக்கள் தொகைக்கு தொடர்ந்து கல்வியளிப்பது குறித்த மிகப்பெரிய கடமை நமக்கு இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த இதில் தொடர்புடைய பலதுறை நிபுணர்கள் ஒன்றிணைய வேண்டும். ஓஎல்எக்ஸில் கடந்த சில ஆண்டுகளாக, பயனர்கள் ஆன்லைனில் பொறுப்புணர்வுடன் கூடிய பாதுகாப்பாக இருப்பதற்கு கவனம் செலுத்தி வருகின்றோம். இது குறித்து 12 ஆயிரம் மாணவர்களிடம் சாதாகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்காக சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்களை பள்ளிகளில் கல்லூரிகளில் நடத்தியிருக்கின்றோம்” என்றார்.