உத்தரப்பிரதேச அரசின் வேலைவாய்ப்பு திட்டங்கள் வெறும் விளம்பரம் மட்டுமே என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி, சமீபத்தில் ‘கரிப் கல்யாண் ரோஜ்கர் யோஜனா’ என்ற திட்டத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டது. இதன் ஒருபகுதியாக ‘ஆத்ம நிர்பார் உத்தரபிரதேசம் ரோஜ்கர் அபியான்’ என்ற திட்டத்தை பிரதமர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க திட்டங்கள் தொடங்குவதாக உத்தரபிரதேச அரசு கூறுவது வெறும் விளம்பரம் மட்டுமே என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார். அரசிடம் இருந்து போதிய நிதியுதவி கிடைக்காததால் சுயதொழில் செய்வோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர், அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் அவர்களுக்கு பயனளிப்பதாக தெரியவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். எனவே
இதனால் சிறு, குறு தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், வேலை இல்லாமல் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.