தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்கள் இருவர் உயிரிழந்தது தொடர்பாக வியாபாரிகளும் பொதுமக்களும் பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளனர்.
➤ தந்தை, மகன் கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காதது ஏன்?
➤ இரவு கைது செய்யப்பட்டவர்களை மறுநாள் பகல் 2 மணி வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தாமதப்படுத்தியது ஏன்?
➤ சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் அருகில் உள்ள தூத்துக்குடி கிளைச் சிறை அல்லது பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லாதது ஏன்?
➤ 100 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோவில்பட்டி சிறைக்கு இருவரையும் கொண்டுசென்றது ஏன்?
➤ உடல்நிலை சரியில்லை எனில் சிறையிலேயே அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?
➤ காவல்நிலையத்திலேயே உடல்நிலை சரியில்லாத இருவரையும் அவசர அவசரமாக சிறையில் அடைத்தது ஏன்?
➤ உடல்நிலை சரியில்லாததை அறிந்த போலீசார், இருவருக்கும் காவல்நிலையத்தில் சிகிச்சை அளிக்காதது ஏன்?
➤ 10 மணி நேரத்தில் அடுத்தடுத்து தந்தையும், மகனும் உயிரிழந்தது எப்படி?
➤ மகன் உயிரிழந்ததை அடுத்து, உண்மையை வெளியில் கூறி விடுவாரோ என தந்தை துன்புறுத்தி கொல்லப்பட்டாரா?
➤ சாதாரண குற்றத்திற்காக இரும்புக்கம்பியால் தாக்கி கொன்றதாக கூறப்படுவது உண்மையா?
இதுபோன்ற பல அடுக்கடுக்கான கேள்விகளை வியாபாரிகளும், பொதுமக்களும் முன்வைத்துள்ளனர்.