மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சத்தமின்றி கொரோனாவை வென்றெடுத்துள்ளது மும்பை தாராவி.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில், கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பத்துக்கு பத்து அளவுள்ள குடிசையில் 7 பேர் வரை வசிக்கும் காரணத்தால், அங்கு கொரோனா தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்றே கணிக்கப்பட்டது.
ஆனால் உடனடியாக மும்பை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. தாராவியின் எல்லைகள் முடக்கப்பட்டு, பரிசோதனை எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டது, இதானால் விரைவாக தொற்று கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படது. இதையடுத்து, கடந்த மே மாதம் 1216 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், தற்போது அது 274 ஆக குறைந்துள்ளது. துரிதமான நடவடிக்கையால் கொரோனாவை துரத்தியிருப்பதாக மும்பை மாநகராட்சிக்கு மத்திய அரசும் பாராட்டு தெரிவித்துள்ளது.