சனி, 20 ஜூன், 2020

சீன அதிபருக்கு பதில் வடகொரிய அதிபர் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்

Viral Video of BJP workers burned Kim Jong Un effigy instead Xi Jinping : இந்திய சீன எல்லைப்பகுதியில் தற்போது நிலைமை சற்று சரியில்லை தான். இரு தரப்பிலும் துப்பாக்கிச்சூடு, உயிரிழப்பு, பலி, காயங்கள் என்று ரணமாக காட்சியளிக்கிறது. கொரோனா ஒரு பக்கம், சீனா மறுபக்கம் என்று மோசமான நிலையில் இந்தியா இருக்கிறது. சீன பொருட்கள் எரிப்பு, சீன பொருட்கள் எதிர்ப்பு, சீன உணவுகளுக்கு நோ-நோ என்று உள்ளூர் பக்கங்களில் போராட்டம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. சீன பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்தால் சீன பொருட்கள் எதிர்ப்புக்கு அவசியம் ஏற்படாது இல்லையா. இதை சொன்னால் நம் மக்கள் எங்கே கேட்பார்கள்.

அத விடுங்க. இங்கன நடந்த ஒரு விஷயத்தை பாருங்க. இந்த அறியாமை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் விழி பிதுங்குகிறது. சீனா மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தும் பொருட்டு பல்வேறு இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் இருக்கும் அசான் சோலை சேர்ந்த பாஜகவினர் சீன அதிபர் சீ ஜின்பிங்கின் உருவ பொம்மையை எரிப்பதற்கு பதிலாக என்ன காரியம் செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.

சீன அதிபர் பெயர் தெரியாமல் கிம் ஜாங் உன் உருவ பொம்பையை எரிக்க இருப்பதாக் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது போன்ற காரியத்தில் ஈடுபட்ட பாஜகவினரை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். உங்க கிட்ட இருந்து முதல்ல கிம் ஜாங் உன்னை காப்பாத்தும் போலவே. தற்போது சமூக வலைதளங்களில் #BoycottChina, #BoycottMadeinChina மற்றும் #BoycottChineseProducts போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.