திங்கள், 22 ஜூன், 2020

கொரோனா நோயாளிகளுக்கு தமிழகத்தில் வழங்கப்படும் உணவு என்ன? அரசு பட்டியல் வெளியீடு!

Daily diet for Corona patients in Tamil Nadu : நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகின்ற காரணத்தால் மருத்துவமனைகளில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெரும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சில இடங்களில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று ஆர்டர் செய்து சாப்பிட்ட கொடுமையெல்லாம் ஆங்காங்கே நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு தமிழக அரசு வழங்கும் உணவு பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.

காலை 7 மணி : காலையில் நோயாளிகளுக்கு இஞ்சி சாறுடன் எலுமிச்சை சேர்த்து கொதிக்க வைக்கப்பட்ட நீர் 200 மி.லி.

காலை 8 மணி : காலை நேர உணவாக இட்லி / ரவை கிச்சடி/ சேமியா கிச்சடி / சம்பா கோதுமை ரவை கிச்சடி அதனுடன் அவித்த முட்டை, ஒரு டம்ளர் பால்

காலை 10 மணி : சாத்துக்குடி ஜூஸ் 250 மி.லி., மிளகுத்தூள் சேர்த்த வெள்ளரிக்காய் சாலட், இஞ்சி தோலுடன் கூடிய எலுமிச்சை கொதிக்க வைத்த நீர் 200 மி.லி.

மதியம் 1 மணி : மதிய உணவாக சப்பாத்தி, காய்கறி சாதம் / புதினா சாதம் / வெஜ் ஃப்ரைட் ரைஸ் , கீரை பொறியல், காய்கறி பொறியல், ரசம்

மதியம் 3 மணி : மஞ்சளுடன் மிளகுத்தூள் கலந்த சுடுநீர் 200 மி.லி.

மாலை 5 மணி : சிறுபருப்பு மிளகு கலந்த சூப், மிளகு கலந்த அவித்த சுண்டல்

இரவு 7 மணி : சப்பாத்தி / இட்லி / ரவை கிச்சடி / சேமியா கிச்சடி / சம்பா கோதுமை / ரவை கிச்சடி மற்றும் பால்

இரவு 9 மணி : இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவைக்கப்பட்ட நீர் 200 மி.லி.

இரவு 11 மணி : மஞ்சளுடன் மிளகுத்தூள் கலந்த சுடுநீர் 200 மி.லி.