ஞாயிறு, 21 ஜூன், 2020

இன்று சூரிய கிரகணம்: எந்த ஊர்களில் தெரியும்? எப்படிப் பார்க்கலாம்?

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (ஜூன் 21 ஆம் தேதி) நிகழ உள்ளது. சூரிய கிரகணம் காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 3.04 வரை நீடிக்கும். உச்சக்கட்ட கிரகணம் மதியம் 12.10 மணிக்கு நிகழும். ஆசியா, ஆப்ரிக்கா, பசிபிக், இந்திய பெருங்கடல், ஐரோப்பாவின் ஒரு சில பகுதிகள் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இந்த சூரிய கிரகணம் தெரியும்.



இது ஒரு வளைய சூரிய கிரகணமாகும் (annular solar eclipse). இந்த கிரகணத்தின் போது சந்திரன் சூரியனை நடுவிலிருந்து மறைக்கும் இதன் காரணமாக ஒரு ஒளி வளையம் வானத்தில் தெரியும். சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் இது நடக்கிறது, சூரியனை முழுவதுமாக மறைக்கும் அளவுக்கு சந்திரனின் ஒப்பீட்டு அளவு பெரியதாக இருக்காது.

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எப்போது நடக்கும் ? அது எங்கெல்லாம் தெரியும் ?

ஜூன் 21 ஆம் தேதி நிகழப்போகும் சூரிய கிரகணம் காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 3.04 வரை நீடிக்கும். உச்சக்கட்ட கிரகணம் மதியம் 12.10 மணிக்கு நிகழும். ஆசியா, ஆப்ரிக்கா, பசிபிக், இந்திய பெருங்கடல், ஐரோப்பாவின் ஒரு சில பகுதிகள் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இந்த சூரிய கிரகணம் தெரியும்.

 

solar eclipse today in tamil nadu solar eclipse 2020 date and time surya grahan- சூரிய கிரகணம்

solar eclipse 2020: சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரிய கிரகணத்தின் போது சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும். சந்திரன், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வருகிறது இதன் காரணமாக சூரியனின் கதிர்கள் பூமியை அடைவது தடுக்கப்படுகிறது. இது இரவு நேரம் போல வானத்தை இருட்டடிப்பு செய்கிறது.
மூன்று விதமான சூரிய கிரகணங்கள் உள்ளன, முழு, பகுதி மற்றும் வளைய சூரிய கிரகணங்கள். முழு சூரிய கிரகணத்தின் (total solar eclipse) போது சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்துவிடும். முழுவதும் இருளாக இருப்பதால் பூமியில் உள்ள மக்களால் இதை காணமுடியாது. பகுதி சூரிய கிரகணத்தின் போது சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் மறைக்கும். கடைசியாக வளைய சூரிய கிரகணத்தின் போது சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்துவிடும் ஆனால் ஒப்பீட்டளவில் அதன் சிறிய அளவு காரணமாக சூரியனின் வெளி வளையம் மக்களுக்கு முழுமையாக தெரியும்.

சுவாரஸ்யமான உண்மை : பொதுவாக சூரிய கிரகணம், சந்திர கிரகணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பிறகோ தான் நிகழும். வழக்கமாக ஒரே வரிசையில் இரண்டு கிரகணங்கள் வரும். இருப்பினும், மூன்று கிரகணங்களை ஒன்றன் பின் ஒன்றாக நாம் பார்த்த நேரங்களும் உள்ளன

அடுத்த சூரிய கிரகணம் எப்போது ?

இந்த ஆண்டு இரண்டு சூரிய கிரகணங்கள் மட்டுமே இருக்கும். முதலாவது ஜூன் 21 ஆம் தேதியும் அடுத்தது டிசம்பர் 14 ஆம் தேதியும் நிகழும். அடுத்து நிகழப்போகும் சூரிய கிரகணம் ஒரு முழு சூரிய கிரகணமாகும். அடுத்து நிகழப்போகும் சூரிய கிரகணத்தை தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்திய பெருங்கடலின் பகுதிகள், அண்டார்டிகா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய இடங்களில் இருந்து காணமுடியும்.