Ravish Tiwari
கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஏற்கனவே தொழில்துறை -புவிசார் அரசியல் சார்ந்த உலக ஒழுங்கை மீட்டமைக்க அச்சுறுத்துகிறது. 2020 வருட கோடை காலத்தில் இந்தியாவுக்கு கூடுதல் சுமையும் ஏற்பட்டுள்ளது.
எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் சீனா-வின் செயல்பாடுகள் ஏப்ரல் மாத இறுதியில் இந்திய அரசின் கவனத்திற்கு வந்தது. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த வன்முறை எல்லை மோதலின் உச்சகட்டமாக அமைந்தது. தொலைதூர லடாக் பகுதியில் நடந்த இந்த வேதனையான சம்பவம் கிட்டத்தட்ட இந்தியாவின் 11 மாநிலங்களில் நடைபெற்ற வீரர்களின் இறுதி சடங்கின் போது உணரப்பட்டது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுடனான எல்லை மோதலில் 20 இந்தியா ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்தியா- சீனா இடையேயான உறவுகள் மீண்டும் ஒரே மாதிரியாக இருக்கப்போவதில்லை. இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை உருவாக்குவதற்கு மூன்று தசாப்தங்களுக்கு மேலாக செய்யப்பட்ட முதலீடுகள் அனைத்தும் கடந்த வாரம் தரைமட்டத்தை அடைந்து. இராஜதந்திர மற்றும் இராணுவ தொடர்புகள் துண்டிக்கப்படாவிட்டாலும், தற்போது அவை நிச்சயமற்ற தன்மையில் உள்ளன.
வரவிருக்கும் வாரங்களில் இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் இராணுவ மட்டத்தில் ஏற்படும் அமைதி உடன்பாடு அடிப்படையில் இருநாடுகளுக்கு இடையேயான உறவு பரஸ்பர சந்தேகங்களுக்கு இடமளிக்குமா என்பதை தீர்மானிக்கும்.
நாளை நடைபெறும்(ஜூன் 23), ரஷ்யா-இந்தியா-சீனா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரவ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். மேலும் ஜூன் 24 ம் தேதி, இரண்டாம் உலகப்போர் வெற்றியின் 75வது ஆண்டு வெற்றி அணிவகுப்பில் கலந்துகொள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர்ராஜ்நாத் சிங் ரஷ்யாபுறப்பட்டு சென்றார். ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடன் நட்புறவு கொண்டுள்ளது.
இந்தியா- சீனா இடையே விரைவில் அமைதி நிலை திரும்பும் என்று சிலர் நம்பிக்கையுடன் இருப்பதற்கு மேற்கூறிய ஈடுபாடுகள் கூட காரணமாக இருக்கலாம். இந்த வாரத்தில் இரு தரப்பிலும் உள்ள இராணுவம் மற்றும் இராஜதந்திர மட்டத்தில் இருந்து அதிகப்படியான அறிக்கைகள் மற்றும் மறுப்பு அறிக்கைகளை வெளியிடுவதை நாம் காணலாம்.
மேலும், இந்தியா – சீனா எல்லைப்பகுதி ராணுவ நடவடிக்கை பொருளாதார / வர்த்தக உறவுகளுக்கும் பரவுகிறதா? என்பதும் வரும் வாரங்களில் தீவிரமாக கவனிக்கப்படும்.
உத்தர பிரதேசத்தில் கான்பூா்-முகல்சராய் இடையே சரக்கு ரயில் போக்குவரத்துக்கான 417 கி.மீ. நீள பிரத்யேக வழித்தடத்தில் சமிக்ஞைகள் மற்றும் தொலைத்தொடா்பு வசதிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியா ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. சீனாவைச் சோ்ந்த பெய்ஜிங் தேசிய ரயில்வே ஆராய்ச்சி, வடிவமைப்பு நிறுவனத்துக்கு கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை மோனோ ரெயில் திட்டம் தொடர்பான ஏலங்களை ரத்து செய்வதாக மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது. இத்திட்டம் தொடர்பான ஏலத்தில் இரண்டு சீன நிறுவனங்கள் மட்டும் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தொலைத்தொடர்பு துறையில் சீன உபகரணங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதாரணமாக, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அதன் 4 ஜி வசதிகளை மேம்படுத்துவதில் சீனத் தயாரிக்கப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று டிஓடி அறிவித்துள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு, ஹவாய் மற்றும் இசட்இ போன்ற சீன நிறுவனங்களான வணிக நலன்களை பாதிக்கும். எனவே, நிலைமை எவ்வாறு உருவாகிறது என்பதைப் பொறுத்து, இந்த வாரம் இதுபோன்ற அதிகமான நகர்வுகளை காணலாம். சீன நிறுவனங்களுக்கு விடுக்கப்படும் சில மறைமுக அச்சுறுத்தல்களையும் நாம் காண முடியும்.